விருதுகள் இணைய முகப்பு - தமிழ்நாடு அரசு
 A+  A   A-   |  திரை வாசிப்பு மென்பொருள் | English

கபீர் புரஸ்கார்

இவ்விருதானது, ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

தகுதி: அரசாணை (நிலை) எண்.962, பொது (பொது-1)த் துறை, நாள் 02.08.1996-ல் வெளியிடப்பட்டுள்ள ஆணைகளின்படி கபீர் விருதானது, தமிழ்நாட்டில் வசிக்கும் எந்தவொரு இந்தியக் குடிமகனுக்கும் (இராணுவப் படையின் உறுப்பினர்கள், காவல் துறை உறுப்பினர்கள், தீயணைப்புத்துறை உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் நிகழத்திய செயல்கள் அவர்களது கடமை எல்லைக்குள் வந்தால் அவர்களைத் தவிர) இவ்விருது வழங்கப்படும்.

இவ்விருதானது கீழ்க்காணும் மூன்று நிலைகள் மற்றும் தகுதியுரைகளைக் கொண்டது.

நிலை-I

மாற்று இனத்தவரை மற்றும் அவர்களுடைய சொத்துக்களை மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றும் போது மீட்பவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்தாலோ அல்லது நிரந்தர ஊனமுற்றாலோ ரூ.20,000/-க்கான ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

நிலை-II

மாற்று இனத்தவரை மற்றும் அவர்களுடைய சொத்துகளை காப்பாற்ற மனவலிமையுடன் வீர தீரச் செயல் புரியும் போது மீட்பவரின் உடலில் காயம் ஏற்பட்டால் ரூ.10,000/-க்கான ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

நிலை-III

மாற்று இனத்தவரை மற்றும் அவர்களுடைய சொத்துக்களை காப்பாற்ற உடல் மூலமாகவும் மற்றும் மனவலிமையுடனும் செயல் புரிந்தவருக்கு ரூ.5,000/-க்கான ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

விருதாளரின் பெயர் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படவேண்டும்