விருதுகள் இணைய முகப்பு - தமிழ்நாடு அரசு
 A+  A   A-   |  திரை வாசிப்பு மென்பொருள் | English

கோட்டை அமீர் விருது

தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அவர் ஆற்றிய சீரிய பணிக்காக ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் “கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது” வழங்கப்படுகிறது.

இவ்விருது மதநல்லிணக்கத்திற்காக போராடி முஸ்லீம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட திரு.கோட்டை அமீர் அவர்களின் நினைவாக வழங்கப்படுகிறது. இவ்விருது மதநல்லிணக்கத்திற்கு சீரிய பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது தங்கமுலாம் பூசிய வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு ரூ.25,000/- (ரூபாய் இருபதைந்தாயிரம் மட்டும்) கொண்டதாகும்.

தமிழ்நாடு அரசு, மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த திரு.கோட்டை அமீர் அவர்களின் பெயரால் “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்" என்ற பதக்கத்தினை தோற்றுவித்து, ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றிவரும் ஒருவருக்கு, அப்பதக்கத்தை, வழங்கி வருகிறது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு பதக்கமும், ரூ.25,000/-ற்கான கேட்பு காசோலையும் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை ஆணையர், சென்னை மற்றும் காவல் துறை தலைவர் (நுண்ணறிவு), சென்னை ஆகியோர்களின் பரிந்துரைகள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டு தேர்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளருக்கு ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி 26ஆம் ந நடைபெறும் குடியரசு தின விழாவின் போது “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்" மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.