A+  A   A-   |  திரை வாசிப்பு மென்பொருள் | English
Awards Portal - Government of Tamil Nadu

தமிழ் நாடு அரசு விருதுகள்

TN_logo



TN_medal

சிங்காரவேலர் விருது

ஒவ்வொரு ஆண்டும் விருதுக்கு விண்ணப்பிக்க செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அவ்வகையில் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தையும் தகுதியின் அடிப்படையில் கூர்ந்தாய்வு செய்து தகுதியான விருதாளர்களின் தன்விவரக் குறிப்புகளைத் தொகுத்து அரசுக்கு அனுப்பப்பெறுகின்றன. அரசு நிலையில் கருதிப்பார்த்து விருதாளரின் பெயர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பெறுகிறது.

மேலும் படிக்க
TN_medal

தமிழ்ச்செம்மல் விருது

தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களுக்கு அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் வழங்குதல்.

மேலும் படிக்க
TN_medal

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது

சமரச நெறிகளால் ஆன்மீகத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்குதல்.விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும்.

மேலும் படிக்க
TN_medal

திருவள்ளுவர் விருது

திருவள்ளுவர் விருது (1986 முதல்) திருக்குறள் நெறி பரப்பும் பெருந்தகையாளர்களில் ஒருவருக்கு திருவள்ளுவர் திருநாள் விழாவில் திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க
TN_medal

இலக்கிய மாமணி விருது

இலக்கிய மாமணி (2021 முதல்) தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் வகையில் பல்வேறு படைப்புகளைப் படைத்தும் பன்முக நோக்கில் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இலக்கியமாமணி விருது வழங்கப்படும்.

மேலும் படிக்க
TN_medal

தமிழ்த்தாய் விருது

தமிழ்த்தாய் விருது (2012 முதல்) தமிழ் அமைப்புகளுக்கு வழங்கப்படும் விருது தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் வாழும் தமிழர்கள், தங்களது பண்பாட்டு வேர்களைக் காப்பதற்காகப் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மொழி இலக்கியம், கலை ஆகியப் பணிகளை மேற்கொண்டு வரும் சிறந்த அமைப்புக்கு “தமிழ்த்தாய் விருது" வழங்குதல்.

மேலும் படிக்க
TN_medal

உ.வே.சா விருது

உ.வே.சா விருது (2012 முதல்) கல்வெட்டுகள், அகழாய்வு, ஓலைச்சுவடிகள் அரிய கையெழுத்துப்படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும்பெரும் முயற்சியால் காணக்கிடைத்து வெளிக்கொணர்ந்தும், தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் பதிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் அறிஞருக்கு வழங்குதல்.

மேலும் படிக்க
TN_medal

உமறுப் புலவர் விருது

உமறுப் புலவர் விருது (2014 முதல்) இஸ்லாமிய தமிழ் காப்பியங்களில் சிறந்த காப்பியமான சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிவரும் தமிழறிஞருக்கு வழங்குதல்

மேலும் படிக்க
TN_medal

இளங்கோவடிகள் விருது

இளங்கோவடிகள் (2015 முதல்) இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்பி வருபவருக்கோ வழங்குதல்

மேலும் படிக்க
TN_medal

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2000 முதல்) இவ்விருது சிறந்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க
TN_medal

பெருந்தலைவர் காமராஜர் விருது

பெருந்தலைவர் காமராஜர் விருது (2006 முதல்) தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித்திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாக தமிழ் சமுதாயம் கல்வி எனும்கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்த வரலாறு படைத்த பெருந்தகையாளர் அவர்களின் அடிச்சுவட்டில், தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படும்.

மேலும் படிக்க
TN_medal

பாவேந்தர் பாரதிதாசன் விருது

சிறந்த கவிஞர் ஒருவருக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க
TN_medal

சொல்லின் செல்வர் விருது

சொல்லின் செல்வர் விருது (2013 முதல்) “சிறந்த இலக்கியப் பேச்சாளராகவும், தமிழர் நாகரீகம் பண்பாட்டை மக்கள் மனதில் சொற்பொழிவு வழி விதைப்பவராகவும் பிற வகையில் தமிழ்த் தொண்டு செய்வோராகவும் உள்ளவருக்கு வழங்குதல்

மேலும் படிக்க
TN_medal

ஜி.யு.போப் விருது

ஜி.யு.போப் விருது (2014 முதல்) அயல்நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளருக்கு வழங்குதல். (விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

மேலும் படிக்க
TN_medal

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது (1979 முதல்) இவ்விருது சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க
TN_medal

கபிலர் விருது

கபிலர் விருது (2012 முதல்) பழந்தமிழர், தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும் தமிழுக்கு அணி சேர்க்கும் வகையிலும் மரபுச் செய்யுள் / கவிதைப் படைப்புகளை புனைந்து வழங்கும் தமிழறிஞருக்கு வழங்குதல்.

மேலும் படிக்க
TN_medal

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது

சிறந்த தமிழ் மென்பொருளுக்கு வழங்கப்படும் விருது (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை) சிறந்த தமிழ் மென்பொருள் தயாரித்த நிறுவனம்/தயாரித்தவருக்கு.

மேலும் படிக்க
TN_medal

அம்மா இலக்கிய விருது

மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்மா இலக்கிய விருது என்ற புதிய விருது வழங்கப்படும்.

மேலும் படிக்க
TN_medal

அயோத்திதாசப்பண்டிதர் விருது

சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் ஆகிவற்றில் தனக்கென தனிமுத்திரைப் பதித்த தகைமையாளர் தமிழறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் அவர்தம் இலட்சிய நோக்கோடு செயன்மையாற்றும்

மேலும் படிக்க
TN_medal

பேரறிஞர் அண்ணா விருது

பேரறிஞர் அண்ணா விருது (2006 முதல்) தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு அண்ணா விருது வழங்கப்படும்.

மேலும் படிக்க
TN_medal

இலக்கண விருது

இலக்கணத் துறையில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்களுக்கு வழங்குதல். (விருதுத்தொகை ரூ.1.00இலட்சம், தகுதியுரை, பொன்னாடை)

மேலும் படிக்க
TN_medal

மொழியியல் விருது

மொழியியல் துறையில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்களுக்கு வழங்குதல். (விருதுத்தொகை ரூ.1.00இலட்சம், தகுதியுரை, பொன்னாடை)

மேலும் படிக்க
TN_medal

மறைமலையடிகளார் விருது

தனித் தமிழில் படைப்புகள் அருகிவரும் நிலையில் தனித் தமிழில் படைப்புகளை உருவாக்கும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும்

மேலும் படிக்க
TN_medal

கம்பர் விருது

தமிழ் இலக்கிய உலகில் சிறந்து விளங்கிய கம்பரைப் பற்றித் திறனாய்வு செய்வோர், கம்பர் படைப்புகளை ஆய்வு செய்வோர், கவிபாடும் ஆற்றல் கதை நிகழ்ச்சி பாத்திரப்படைப்பு

மேலும் படிக்க
TN_medal

காரைக்கால் அம்மையார் விருது

காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றி வரும் மகளிர் ஒருவருக்கு வழங்குதல்.விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும்.

மேலும் படிக்க
TN_medal

தேவநேயப் பாவாணர் விருது

தமிழ் வேர்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல் மற்றும் தனித்தமிழைப் போற்றுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் அகராதியியல் துறையில் சிறந்து விளங்கும்

மேலும் படிக்க
TN_medal

வீரமாமுனிவர் விருது

வீரமாமுனிவர் நெறியில் அவர்தம் படைப்பு நடையில் சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் உருவாக்கியும் தமிழ் அகராதித் துறையில் சிறந்து விளங்கியும், தமிழ் அகராதிகளை வெளியிட்டுள்ள தமிழைத் தாய்மொழியாகக்

மேலும் படிக்க
TN_medal

இலக்கிய விருது

இலக்கியத் துறையில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்களுக்கு வழங்குதல். (விருதுத்தொகை ரூ.1.00இலட்சம், தகுதியுரை, பொன்னாடை)

மேலும் படிக்க
TN_medal

மொழி பெயர்ப்பாளர் விருது

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்”” என்ற பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தரமான பிறமொழிப் படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி

மேலும் படிக்க
TN_medal

மகாகவி பாரதியார் விருது

மகாகவி பாரதியார் விருது (1997 முதல்) பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் முழுமையாகப் பயின்று ஆய்வு மேற்கொண்டு பாரதியாரைப் பற்றிய கவிதைகள் மற்றும் பாரதியின் புகழ் பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைத்தோர், பிற வகையில் தொண்டு செய்தோர், செய்பவர்களுக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க
TN_medal

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விருது

தமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் போற்றியும், பிறமொழிக் கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பட்டுவரும் நாளிதழ், வாரஇதழ் மற்றும் திங்களிதழ்

மேலும் படிக்க