அறிவிப்புகள்

...

மாநில அரசு மற்றும் மத்திய அரசு விருதுகளின் தற்போதைய புதிய அறிவிப்புகள்.

கல்பனா சாவ்லா விருது

தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட பெண்கள் துணிச்சலான மற்றும் வீர தீரச் சாகச் செயல் புரிந்தமைக்காக அவர்களை பாராட்டி அரசு “துணிவு மற்றும் வீரதீரச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது” வழங்குகிறது. 2020-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் உரிய படிவத்தில் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடனோ அல்லது இணையதளம் வாயிலாகவோ 30.06.2020க்குள் பொது (பொது-1)த் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9-க்கு கிடைத்திடுமாறு அனுப்பிவைக்கப்படவேண்டும். விருதாளருக்கான பதக்கம் கோட்டை கொத்தளத்தில் 15.08.2020 அன்று நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவின்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.