விருதுகள் இணைய முகப்பு - தமிழ்நாடு அரசு
 A+  A   A-   |  திரை வாசிப்பு மென்பொருள் | English

கல்பனா சாவ்லா விருது

துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது
...

அரசாணை பார்வையிட இங்கே சொடுக்கவும்

விருது பெற்றவர்களை பார்வையிட

கல்பனா சாவ்லா விருது

தமிழ்நாட்டைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்கு “கல்பனா சாவ்லா” விருது வழங்கப்படுகிறது.துணிச்சலான மற்றும் வீரசாகச் செயல் புரிந்த பெண்களை “கல்பனா சாவ்லா” விருதுக்கு தேர்வு செய்வதற்கு கீழ்காணும் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அரசாணை (நிலை) எண்.791, பொது (பொது-1)த் துறை நாள். 04.08.2003ல் வெளியிடப்பட்டுள்ளது;

(i)தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட ஒரு பெண் துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்தமைக்காக இப்பதக்கம் வழங்கப்பட வேண்டும். இப்பதக்கம் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட வேண்டும்.

(ii)இவ்விருது பதக்க வடிவில் “துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது” எனப் பெயரிடப்பட்டிருக்க வேண்டும்

(iii) இப்பதக்கம் 83 மிமீ.விட்டம் மற்றும் 8 மிமீ. தடிமன் கொண்ட வட்ட வடிவத்தில் இருக்க வேண்டும். இப்பதக்கம் தங்க மூலாம் பூசிய வெள்ளியால் தயாரிக்க வேண்டும். இப்பதக்கத்திற்கான செலவு ரூ.5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) ஆக இருக்க வேண்டும்.

(iv) இப்பதக்கத்துடன் கூடுதலாக ரூ.5.00 லட்சத்திற்கான (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் விருதாளருக்கு வழங்கப்படவேண்டும்.

(v) வருடத்திற்கு ஒரு பதக்கம் வழங்கப்பட வேண்டும். விருதாளரின் பெயர் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படவேண்டும்.

(vi) இவ்விருதிற்காக அரசால் அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவால் விருதாளர் தேர்வு செய்யப்பட்டு அவரது பெயர் அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.